விபரீதமான பிறந்தநாள் விழா கொண்டாட்டம்... விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்!

Incident birthday celebration, Police investigating

திருச்சி அருகே சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் குளக்கரையைச் சேர்ந்த சின்ராசு மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகிய 3 பேரும் தில்லைநகர் பகுதியில் உள்ள மெடிக்கல் ஏஜென்சியில் மருந்து பொருட்கள் டெலிவரி செய்பவர்களாக பணியாற்றிவருகின்றனர். இதில் வழக்கம்போல அனைவருக்கும் இரவு 8.30க்கு வீட்டுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் தென்னூர் சுப்பையா பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அதிர்ச்சியடைந்த 3 பேரும் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே குதித்தனர். இந்தச் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தில்லை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது பழைய அக்ரஹாரத்தைச் சேர்ந்த திவாகர் என்பவர் தனது பிறந்தநாளையொட்டி நள்ளிரவில்அவரது வீட்டு மொட்டை மாடியில் 100 டபுள் ஷாட் வெடி வெடித்துக் கொண்டாடியுள்ளார். இதில் ஒரு வெடி வெடிக்காமல் மேலே சென்று கீழே விழும்போது ராஜ்குமார் முகமருகே வெடித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

trichy Youth
இதையும் படியுங்கள்
Subscribe