கோவையில் பட்டாக்கத்தியுடன் பிறந்தநாள் கேக்... மேலும் மூவர் கைது!

கோவை சரவணம்பட்டி அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி , புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

birthday celebrated with Sword.. Three more arrested

கோவை சரவணம்பட்டியில்கடந்த 30-7-19 அன்று சூர்யா என்பவர் பிறந்தநாளை முன்னிட்டு பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி, அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக சட்டத்திற்கு விரோதமாக கூடுதல், 25(1)(a)1969 சட்ட விரோதமாக அபாயகரமான ஆயுதம் வைத்திருந்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே, இந்த வழக்கில் சுந்தரம், சதீஷ்குமார் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் அந்த வழக்கில்சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த கனி அமுதன், சூரிய மகேஷ்வரன், ராஜ ரத்தினம் ஆகிய மூவரை சிவானந்தபுரம் மாருதி நகரில் வைத்து சரவணம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கேக் பார்ட்டிக்கு பயன்படுத்திய 3 கத்தியும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கனி அமுதன் மீது கடந்த 2013 ஆம் ஆண்டு ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

arrest birthday kovai police TAMILANDU
இதையும் படியுங்கள்
Subscribe