Advertisment

கோவையில் பட்டாக்கத்தியுடன் பிறந்தநாள் கேக்... இருவர் கைது!

கோவையில் ரவுடிகள் இருவர் தலைமையில் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Birthday cake with Sword in  kovai ... Two arrested

சென்னையில் கடந்த வருடம்பினு என்கிற ரவுடி பல ரவுடிவுகளுடன் சேர்ந்து அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதை அடுத்து பினு கைது செய்யப்பட்டான்.அந்த நிகழ்வையடுத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டும்இந்த கலாச்சாரம் தமிழகத்தின் பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை சரவணம்பட்டியில் ஒரு ரவுடி கும்பல் ஒன்று பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானதை அடுத்து சரவணம்பட்டி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

Birthday cake with Sword in  kovai ... Two arrested

இதில் தொடர்புடைய சதீஸ், சுரேந்தர் என்ற இருவரை போலீசார்தற்போது கைதுசெய்துள்ளனர். இவர்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

arrest kovai police rowdy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe