/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4513.jpg)
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா வெல்லக்கால்பட்டி முருகேசன் மனைவி கோகிலா (26). இவருக்கு நேற்று பிரசவ வலி வந்துள்ளது. உடனடியாக அவரது வீட்டில் இருந்தவர்கள், 108-க்கு அழைப்பு விடுத்தனர். அதனைத் தொடர்ந்து செங்கிப்பட்டியில் இருந்து புறப்பட்ட 108 ஆம்புலன்ஸை ஓட்டுநர் சக்திவேல் வாகனத்தை எடுத்துக்கொண்டு கோகிலா வீட்டை நோக்கி வேகமாக வர, அதேசமயத்தில், மருத்துவ உதவியாளர் தியாகராஜன் ஆம்புலேன்ஸில் மருத்துவ உபகரணங்களை தயார்படுத்திக் கொண்டுவந்தார்.
சிறிது நேரத்தில் கோகிலா வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் கோகிலாவிற்கு இது 3 வது பிரசவமானாலும் வலி அதிகரிக்க ஆம்புலன்சில் போக முடியாது என கதறினார். உடனே மருத்துவ உதவியாளர் தியாகராஜன் கோகிலா வீட்டில் வைத்தே பிரசவம் பார்க்க அழகான ஆண்குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர். தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அண்டக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல்ல முறையில் சேர்த்தனர். உரிய நேரத்தில் வந்து பிரசவமும் பார்த்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் தியாகராஜன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சக்திவேல் ஆகியோரை கிராம மக்கள் பாராட்டி நன்றி கூறினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)