ADVERTISEMENT

மாங்குரோவ் காடுகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

06:05 PM Jan 30, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் 2 நாட்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் பிச்சாவரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் வனவர் அருள்தாஸ், வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், சரண்யா, அபிராமி, சரளா, வனக்காவலர்கள் பாலகிருஷ்ணன், படகு ஓட்டுநர் முத்துக்குமரன், அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி கடல்வாழ் உயிரின பாடப்பிரிவு மாணவர்கள், பறவைகள் ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டு பிச்சாவரம் மாங்குரோவ் காட்டுப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பில் 83 வகையான பறவைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்துள்ளன. இவற்றில் 15க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் கண்டறியப்பட்டன. கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு வனத்துறை சார்பில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT