/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chicken345.jpg)
பறவைக் காய்ச்சல் காரணமாக கோழி, வாத்து உள்ளிட்டவைகளைக் கேரளாவில் இருந்து தமிழகம் கொண்டுவர தடை விதித்து தமிழக கால்நடைத்துறையின்இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கால்நடைத்துறை இயக்குனரின் உத்தரவில், 'கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் பரவிய பறவைக் காய்ச்சல், தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களைத் திருப்பி அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள கன்னியாகுமரி, திருப்பூர், தென்காசி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 26 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்குக் குளோரின் டை- ஆக்ஸைடு தெளிக்க வேண்டும். கோழிப்பண்ணைகள், பறவைகள் சரணாலயங்களில் கிருமிநாசினி தெளித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)