Skip to main content

கிடா வெட்டு விருந்தில் இருதரப்பினர் மோதல் 

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

A bipartisan conflict at the Kida cut party

 

மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் குமரவேல். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயில் தங்கள் குடும்ப விசேஷங்கள் எதுவானாலும் இங்கு வந்து குலதெய்வத்தை வழிபட்ட பிறகுதான் குமரவேல் குடும்ப சுப நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அதன்படி தனது பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்த முடிவு செய்த குமரவேல் கோமங்கலம் அய்யனார் கோவிலுக்கு நண்பர்கள் உறவினர்களுடன் வாகனங்களில் வருகை தந்தார். அய்யனார் கோவிலில் பிள்ளைகளுக்கு காதுகுத்து விழாவில் ஒரு பகுதியாக அங்கிருந்த சாமிகளுக்கு கிடா வெட்டி பூஜை நடத்தப்பட்டது.

 

படையலிட்ட பிறகு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் கறி விருந்து வைக்கப்பட்டு அனைவரும் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சிலர் சென்று அந்த கறி விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்டுள்ளனர். அப்போது குமரவேல் உறவினர்களுக்கும் உள்ளூர் காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கோமங்கலம் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கும், குமரவேல் அவரது உறவினர் சிவதாஸ் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

 

இதற்கு கோமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து குமரவேல் தரப்பைச் சேர்ந்த ரமேஷ், சக்திவேல் ஆகிய இரண்டு பேரை மட்டும் கோவிலுக்குள் வைத்து பூட்டி சிறை வைத்தனர். இது குறித்த தகவல் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக டிஎஸ்பி ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த கோமங்கலம் கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் காதணி விழா நடத்த வந்த குமரவேல் தரப்பினர் தங்களை சாதி பெயரை சொல்லி திட்டினார்கள் அவர்களை கைது செய்ய வேண்டும் அதோடு அவர்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அப்போதுதான் கோவிலை விட்டு அவர்களை வெளியே அனுப்புவோம் என்று கூறினர்.

 

போலீசார் கோவிலுக்குள் இருப்பவர்களை மீட்க அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு ஏழு மணி அளவில் கோவிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குமரவேல் உறவினர்கள் ரமேஷ், சக்திவேல் ஆகிய இருவரையும் போலீசார் வெளியே கொண்டு வந்தனர். அவர்களை அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைக்க செல்ல முயன்றனர். ஒரு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் உள்ளூர் மக்கள். இருப்பினும் போலீசார் அவர்களை சமாதானம் செய்து சிறை பிடிக்கப்பட்ட இரண்டு பேரையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த குறித்து போலீசார் தவறு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். காதணி விழாவிற்கு வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கும் உள்ளுக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்