publive-image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பயோ மெட்ரிக் முறையைக் கொண்டு வரவேண்டுமென மத்திய - மாநில அரசுகளுக்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வலியுறுத்தியிருப்பதாவது; “கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிக்கவும், விவசாயம், நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கிராமப்புற செயற்பாட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று இச்சட்டம் 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் சிறப்பு ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்ய ENMR முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisment

சில கிராம ஊராட்சிகளில் பணியாளர்களின் வருகையை உறுதி செய்யும் நிழற்படம் எடுக்காமலேயே சிலருக்கு மட்டும் சாதகமாக வருகை பதிவு உறுதி செய்யப்பட்டு அரசின் நிதி நூதன முறையில் திருடப்படுகிறது. இக்குறைபாட்டை நீக்க அரசு உடனடியாக பயோ மெட்ரிக் முறையில் பணி தளத்தில் கைரேகை பதிவின் மூலம் பணியாளர்களின் வருகைப் பதிவை உறுதி செய்யும் முறையை கொண்டு வரவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.