Advertisment

உயிரைப் பறித்த பைக் வீலிங்; மாணவிகள் முன் கெத்து காட்ட நினைத்த இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்

Bike Wheeling; The tragedy of the young man who wanted to show off in front of the students

மாணவிகள் முன்பு கெத்து காட்டுவதாக நினைத்து பைக் வீலிங்கில் ஈடுபட்ட இளைஞர் நிலை தடுமாறி லாரி மீது மோதி உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள தண்டலச்சேரியில் அரசு கலைக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி பேருந்து நிறுத்தப் பகுதியில் கல்லூரி முடிந்துமாணவிகள் பேருந்துக்காகக் காத்திருக்கும் நேரத்தில், சில இளைஞர்கள் மாணவிகளிடம் கெத்து காட்டுவதாக நினைத்துக்கொண்டு விலை உயர்ந்த பைக்குகளில் வீலிங் செய்வது, அதி வேகத்தில் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கேடிஎம் பைக்கில் கபிலன் (19) என்ற மாணவர் வீலிங்கில் ஈடுபட்ட பொழுது லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த விஜய்சங்கர் என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். வாகனத்தை இயக்கிய கபிலன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

college Bikers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe