Advertisment

பைக் திருட்டு: தேடுதல் வேட்டையில் போலீஸ்

Bike theft Police in search

Advertisment

திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள துலுக்கநத்தம் அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முத்துக்குமார் (46). இவர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருந்தார். இதன் காரணமாக இவர் தனது நண்பரான எலக்ட்ரீஷியன் மணிகண்டன் வீட்டில் இரவு தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தை நண்பர் மணிகண்டன் வீட்டிற்கு அருகில் உள்ள காமராஜர் மன்றத்தில் நிறுத்தியிருந்தார். பின்னர் காலை எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. உடனே அருகில் உள்ள செஷன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe