A robbery incident in Nagapattinam

நாகையில் பரபரப்பாகக் காணப்படும் பெரிய கடைவீதியில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலிலேயே இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி கொண்டுதிருடிச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Advertisment

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத். இவர் தனது வீட்டில் நடைபெற உள்ள சுப‌ நிகழ்வு ஒன்றிற்காக புது துணிகள் எடுக்க நாகையிலுள்ள பிரபல துணிக்கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். கடையின் முகப்பு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற‌ நிலையில், அதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாவியை ஒருவர் எடுத்துக்கொடுக்க அதனைக் கொண்டு லாவகமாகபைக் சைடு லாக்கைதிறந்து நைசாக திருடிச் செல்லும் பரபரப்பு காட்சிகள் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில்பதிவாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில், வினோத் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்துசிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சிசிடிவி காட்சியில் போலீஸ் அருகில் இருக்கும்போதுஎந்தவித அச்சமுமில்லாமல் அந்த நபர் பைக்கை திருடிச் செல்கிறார். நாகையில் பட்டப்பகலிலேயே லாவகமாக கள்ளச்சாவி கொண்டு 3 பேர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.