மதுரையில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் வீலிங் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.
மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு கீழ் மேலமடையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் இளைஞர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக ஒருவரை ஒருவர் அதிக வேகத்தில் முந்தியபடி இருசக்கர வானத்தை இயக்கினர். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் முக்கிய சாலையில் இப்படி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்கள் குவிந்து வருகிறது.