/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-std_2.jpg)
திருச்சி காட்டூர் எல்லகுடியைச் சேர்ந்த மாதேஷ்(24), தனது நண்பர் சூர்யா(27) என்பவருடன், கொடியாலம் கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு தங்களது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, முத்தரசநல்லூர் ரயில்வே கேட் கரூர் அருகில் திருச்சியிலிருந்து நோக்கி சென்ற லாரி இவர்கள் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மாதேஷ், சூர்யா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)