
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அடுத்த கொளத்துப்பாளையம் அருகே உள்ள கொம்பணிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(43). மெக்கானிக்கான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு குமார் மதுபோதையில் தனது மோட்டார் சைக்கிளில் கொம்பணிபுதூர் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்தார்.
வேளாங்காட்டூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்திலிருந்த வேப்ப மரத்தில் குமார் மோட்டார் சைக்கிளுடன் மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த குமார், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கொடுமுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)