/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/998_97.jpg)
பட்டப் பகலில் காவல் நிலையம் அருகே பைக் திருடப்பட்ட சம்பவம்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தொட்டி கிணறு பகுதியைச் சேர்ந்தவர்குட்டி (37). இவர் நாட்றம்பள்ளி காவல் நிலையம் அருகே குட்டி ஜுவல்லர்ஸ் எனும் பெயரில்நகைக் கடை ஒன்றுவைத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கடையைத்திறந்து வியாபாரம் நடந்து வந்த நிலையில் சடலகுட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது நகையை குட்டி ஜுவல்லரியில் அடகு வைத்துள்ளார். இதனை மீட்க வந்த நிலையில் கடையின் முன்பு தனது பல்சர் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றபோது, இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள்பல்சர் பைக்கை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பானசிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையம் அருகிலேயே இந்த திருட்டு சம்பவம் நடந்தேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)