The bike that collided with the truck! Young people in hospital

Advertisment

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவளர்ச்சோலை பகுதியில் மாலை 5.30 அளவில் கல்லணையில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது அவர்கள் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூன்று வாலிபர்களும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதேவிபத்தில், லாரியை பின்தொடர்ந்து சென்ற காரும் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுமையாக பாதிப்படைந்தது. இந்த விபத்தினால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.