Advertisment

கணவன் கண் முன்பே மனைவி உயிரிழந்த பரிதாபம் : காவல்துறை அலட்சியத்தால் நடந்த விபரீதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்த 37 வயதான செந்தில்குமார் மற்றும் அவருடைய 36 வயதான மனைவி மேரி என்கின்ற மலர்கொடி. இவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பாக வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். மே 30ந்தேதி மதியம் 2 மணிக்கு உணவு உண்ணுவதற்காக ஆனந்தகிருஷ்ணா ஹோட்டல்க்கு வந்துள்ளனர்.

Advertisment

bike accident in thanjor- by police negligence

இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் முன்னால் சென்ற லாரியை கடக்க முயற்சிக்கும்போது வண்டியின் பின்புறம் அமர்ந்து சென்ற மனைவி மேரி என்கின்ற மலர்க்கொடி லாரியின் மீது கணவர் இடித்ததால் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த வேகத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். கணவன் கண் முன்பே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த மனைவியை கண்டு அழுதது அப்பகுதி மக்களை கலங்க வைத்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் நகர காவல்நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரப்பகுதிக்குள் கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வெளியூர் வாகனங்கள் உள்ளே செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதனை மீறி அல்லது அங்கு காவல் பணியில் உள்ள போலிஸாருக்கு லஞ்சம் தந்துவிட்டு நகரத்துக்குள் கனரக வாகனங்கள் உள்ளே செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

accident death police Thanjai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe