Bike accident near karur one passed away

Advertisment

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள காமக்காபட்டி பிரிவு அருகே கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஜோஷின் என்ற இளைஞர் அதிவேக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து தூக்கி வீசப்பட்டு தலையின் பின்புறம்பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த காளிமுத்துவின் உடலைமீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த அரவக்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.