Advertisment

நேருக்கு நேர் மோதி இரு சக்கர வாகனங்கள் தீப்பிடிப்பு:இருவர் பலி!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள எ.சித்தூரை சேர்ந்த செல்வராசு எனபவரின் மகன் நெப்போலியன் ( 25), இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்த நெப்போலியன் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியன் மகன் ராமமூர்த்தி (25) என்பவருடன் பெண்ணாடம் அருகிலுள்ள வடகரையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

Advertisment

bike accident near cuddalore

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அதேபோல் பெண்ணாடத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வேலை செய்து வந்த நரசிங்கமங்கலத்தை சேர்ந்த தங்கராசு மகன் வேல்முருகன் (40) என்பவர் வேலையை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இரு தரப்பினரும் எதிரெதிர் திசையிலிருந்து திருமலை அகரம் என்ற இடத்தில் வந்த போது 2 இரு சக்கர வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில் நெப்போலியன் ஓட்டிச் சென்ற வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த ராமமூர்த்தி சாலையோரத்தில் உள்ள விவசாய நிலத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

bike accident near cuddalore

அதேசமயம் மோதிக் கொண்ட வேகத்தில் இரண்டு வண்டிகளும் தீப்பற்றி எரியத் தொடங்கின. அத்துடன் வண்டிகளை ஓட்டி வந்த நெப்போலியன், வேல்முருகன் ஆகிய 2 பேர் மீதும் தீ பற்றி எரிந்தது. அதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் 2 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிழந்தனர்.

bike accident near cuddalore

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இது பற்றி தகவல் அறிந்த அங்கு வந்த பெண்ணாடம் போலீசார் விபத்தில் படுகாயமடைந்த ராமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பலியான நெப்போலியன், வேல்முருகன் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

accident bike Cuddalore died
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe