A Bihar worker passes away in erode

பீகார் மாநிலம், மேற்கு சம்பரான் மாவட்டம், தோக்ரா பகுதியைச் சேர்ந்தவர் உமாசங்கர் பஸ்வான் (22). இவர் கடந்த 5 வருடங்களாக ஈரோடு, மரப்பாலம் பகுதியில் தங்கள் ஊரைச் சேர்ந்த 5 பேருடன் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.

Advertisment

நேற்று காலை அனைவரும் வழக்கம்போல வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, உமாசங்கர் பஸ்வான் ஊரில் இருக்கும் தனது மனைவியுடன் செல்போனில் கூச்சலிட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, அவருடன் வேலை பார்ப்பவர்களிடம் தான் இன்று வேலைக்கு வரவில்லை எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், அவர்கள் மதியம் 2 மணிக்கு மீண்டும் அறைக்கு வந்து பார்த்தபோது, கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்துள்ளது. ஜன்னலைதிறந்து பார்த்தபோது அறையில் உமாசங்கர் பஸ்வான் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக கதவை உடைத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசுதலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.