Bihar IAS officer said there is no problem with migrant workers in Tamil Nadu

தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அப்படி யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் திமுக அரசும் தமிழ்நாட்டு மக்களும் அரணாக இருப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இதனிடையே வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் பரவிய வதந்தியை அடுத்து ஆய்வு செய்வதற்காக இன்று சென்னை வந்த பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலக் குழுக்கள் தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் தலைமையில் ஆலோசனை நடத்தியது.

Advertisment

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பீகார் அதிகாரிகள் குழு, “பீகாரிலிருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களிடம் பேசினோம். அவர்கள்எந்த பிரச்சனையும் இன்றி தமிழ்நாட்டில் இருப்பதாகத்தெரிவித்தனர். தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சமூக வலைத்தளங்களில் பரவும் போலி வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம். அடுத்ததாக திருப்பூர், கோவைக்கு சென்று புலம்பெயர் தொழிலாளர்களை சந்திக்க உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.