Advertisment

நடிகா் விஜய்க்கு "பிகில்" சிலை

தமிழ் சினிமாவில் நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அடுத்து விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகா்கள் பட்டாளங்கள் உள்ளன. குறிப்பாக அங்கு இளம் பெண்கள் மத்தியிலும் விஜய்க்கு நல்ல ஓரு வரவேற்பு உள்ளது. இதனால் விஜய் படங்கள் வெளியாகும் அன்று அங்குள்ள ரசிகா்கள் வெறித்தனமாக தியேட்டா் முன் கொண்டாடுவார்கள். தமிழகத்தைப்போலவே கட்- அவுட் வைத்து, பால் ஊற்றி சா்க்கார் படத்தையும் கொண்டாடினார்கள்.

Advertisment

actor vijay Statue

இந்த நிலையில் இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகா்களுக்கு விருந்தாக அட்லி இயக்கத்தில் "பிகில்" திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இதில் கேரளாவிலும் 50-க்கும் மேற்பட்ட தியேட்டா்களில் நாளை ரிலீஸ் ஆகிறது. இதனால் கேரளாவில் விஜய் ரசிகா்கள் உற்சாகம் அடைந்துள்ளனா்.

Advertisment

திருவனந்தபுரத்தில் கைரளி திரையரங்கில் பிகில் படம் ரிலீஸ் ஆவதையொட்டி திரையரங்கு முன் விஜய் உட்கார்ந்து இருப்பது போல் ஒரு சிலையை வைக்க ரசிகா்கள் முடிவு செய்தனா். அதற்கு மாநகராட்சி அனுமதி கொடுக்காததால் அந்த சிலையை வாகனத்தில் வைத்து மாநகரம் முமுவதும் நாளை காலையில் இருந்து மேளம் தாளத்துடன் சுற்றி வர ரசிகா்கள் ஏற்பாடு செய்துள்ளனா்.

இதற்காக போலிசார் அனுமதியும் பெற்றுள்ளதாக ரசிகா்கள் தெரிவித்துள்ளனா். தமிழக ரசிகா்களுக்கு நாங்கள் சலைத்தவா்கள் இல்லையென்று கேரளா ரசிகா்கள் காட்டியுள்ளனா்.

actor vijay bigil statue
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe