Advertisment

‘பிக்பாஸ்’ சனம் ஷெட்டி அளித்த புகாரில் தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன்!

bigboss sanam complaint dharshan chennai high court

பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டி அளித்த புகாரில் பதிவான வழக்கில், தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்த தர்ஷன், தன்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும், திருமணம் செய்ய மறுத்ததோடு, சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து, தன்னையும் தன் குடும்பத்தையும் இழிவுபடுத்தியதாகவும், 4-வது சீசனின் போட்டியாளர் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Advertisment

bigboss sanam complaint dharshan chennai high court

இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் வழங்கக் கோரி, தர்ஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய்ப் புகார் அளித்துள்ளதால், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இரு வாரங்களுக்கு, தினமும் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனதர்ஷனுக்கு நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

chennai high court tharshan sanam shetty
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe