Skip to main content

இவர்கள்தான் பிக்பாஸ்3 போட்டியாளர்கள்!? 

விஜய் டிவில உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூனாவது சீசனுக்கு வந்துருச்சு.. முதல் சீசன்ல ஜுலி, காயத்ரி, ஆர்த்தி, ஆரவ், ஓவியான்னு செம பரபரப்பா விறுவிறுப்பா போச்சு.. ஆனா அந்த விறுவிறுப்பு ரெண்டாவது சீசன்ல இருந்துச்சான்னு கேட்டா கொஞ்சம் கம்மியாதான் இருந்துச்சு. இருந்தாலும் பிக் பாஸுக்கான மாஸ் இன்னும் மக்கள் மத்தில இருந்துட்டே தான் இருக்கு.. மூனாவது சீசன் வரப்போகுதுன்னு சொன்னவுடனே அந்த பரபரப்பு அதிகமாக ஆரம்பிச்சுருச்சு.

முக்கியமா, இந்த சீசன கமல் தொகுத்து வழங்குவாரான்ற கேள்வி எழுந்துச்சு. ஏன்னா போன சீசனுக்கும் இந்த சீசனுக்குமான கேப்ல, கமல் மக்கள் நீதி மய்யம்னு அவரோட கட்சிய ஆரம்பிச்சுட்டாரு.  அதனால இந்த சீசன் அவர் பண்ணுவாரா மாட்டாரான்னு ஒரு சின்ன சந்தேகம் இருந்துச்சு. பிக் பாஸ் 3 ப்ரோமோ வந்ததும் அது சால்வ் ஆய்டுச்சு. எல்லார் கவனமும் அடுத்த கேள்விக்குள்ள போயிருச்சு.

யார் அந்த 14 கன்டெஸ்டன்ட்ஸ்? இதுதான் அந்த மில்லியன் டாலர் கேள்வி. ஒவ்வொருத்தரும் இஷ்டத்துக்கு அவுக வாராக.. இவுக வாராகன்னு கதைய அவுத்துவிட ஆரம்பிச்சுட்டாங்க. யார்லாம் வரனும்ணு நாம நினைக்கறது இருக்கட்டும்.. இப்ப அந்த பிக் பாஸ் வீட்டுக்குள் யார் யார் போகப் போறாங்கன்றத பாப்போமா?

1. கவின் என்கிற வேட்டையன்

விஜய் டிவில கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக அறிமுகமானவர் கவின். ஆனா அதுக்கடுத்து சரவணன் மீனாட்சி சீரியல்ல, அவர் பண்ண வேட்டையன் கேரக்டர்தான் அவர தமிழ்நாடு ஃபுல்லா ஃபேமஸ்  ஆக்குச்சு. நிறைய ரசிகர்களயும் சம்பாதிச்சு கொடுத்துச்சு.

 

kavinவேட்டையன் கேரக்டர் அந்த சீரியல்ல பண்ண சேட்டைகளும், கவினோட இயல்பான நடிப்புமா சேர்ந்து அவர ரொம்ப சீக்கிரத்துலயே பெரிய புகழுக்கு கூட்டிட்டு போச்சு. தொடர்ந்து விஜய் டிவிலயே சில நிகழ்ச்சிகள தொகுத்து வழங்கிட்டு இருந்தாங்க. அடுத்த சிவகார்த்திகேயன்னு கூட அவர கூப்ட ஆரம்பிச்சாங்க.

இந்த நிலைமைலதான் டிவில நடிக்கறத நிப்பாட்டுனாரு கவின். இனிமே சினிமாலதான் நடிப்பேன்னு முடிவு பண்ணி சில படங்கள் கமிட் ஆனார். விக்ரம் பிரபு நடிச்ச 'சத்ரியன்' படத்துல ஒரு சின்ன ரோல் பண்ணாரு. தனியா ஹீரோவா, 'நட்புனா என்னானு தெரியுமா' படத்துல கமிட் ஆனார். நிஜமாவே அடுத்த சிவகார்த்திகேயனா வந்துருவாருன்னு எல்லாரும் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்தப்ப, 'நட்புனா என்னானு தெரியுமா' படம் ரிலீஸ்  ஆக ரொம்ப லேட்டாச்சு. இதனாலயே கூட, படம் நல்லா இருக்குன்னு டாக் இருந்தும், சரியான தியேட்டர்கள் கிடைக்காம, படம் பெரிய அளவுல வெற்றி பெறாம போயிருச்சு.

3 வருஷமா டிவி பக்கம் வராம இருந்த கவின், பிக் பாஸ் 3 மூலமா மறுபடியும் சின்னத்திரைக்கு வர்றாரு. சினிமால வாய்ப்பு தேடிட்டு இருக்குறவங்களுக்கும், வெற்றிக்காக காத்துக்கிட்டு இருக்குறவங்களுக்கும், பிக் பாஸ் ஒரு பெரிய மேடையா இருக்கும்ன்ற நம்பிக்கை பலமா இருக்கு. கவினும் அந்த நம்பிக்கைல தான் பிக் பாஸ்க்குள்ள போறாரு. நிச்சயமா பிக் பாஸ் 3 சினிமாவுல அவருக்கான கதவுகள திறந்து விடட்டும்.


2. மோகன் வைத்யா

பிக் பாஸ் 3 வீட்டுக்குள்ள போகப்போற அடுத்த கன்டெஸ்டன்ட், கர்னாடிக் சிங்கர், வயலின் கலைஞர் மோகன் வைத்யா. இவர் வீணை வித்வான் ராஜேஷ் வைத்யாவோட அண்ணன். சினிமாலயும் சில சீரியல்கள்லயும் இவர் நடிக்கவும் செஞ்சுருக்காரு.

 

mohan vaithyaசாய் சிஷ்யான்னு ஒரு ம்யூசிக் ஸ்கூல வச்சு நடத்திட்டு இருக்கும் மோகன் வைத்யா, ரொம்ப தன்மையா பேசக்கூடிய மனிதர். பிக் பாஸ் வீடு அவரோட அந்த தன்மையா மாத்துதா இல்லையான்றத வெயிட் பண்ணி பாக்கலாம்.

3. வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் 3 வீட்டுக்குள்ள போகப்போற இன்னொரு போட்டியாளர், வனிதா விஜயகுமார். நம்ம நாட்டாமை விஜயகுமாரோட பொண்ணேதான். அதுமட்டுமில்ல.. 'சந்திரலேகா' படத்துல நம்ம தளபதி கூட ஹீரோயினா நடிச்சுருப்பாங்களே அதுவும் இந்த வனிதா விஜயகுமார் தான். தமிழ்ல மட்டுமில்ல, மலையாளம், தெலுங்குல பல  மொழிகள்ல நடிச்சுருக்காங்க.

 

vanithaசமீபத்துல விஜயகுமார் கூட சில வேண்டத்தகாத பிரச்சினைகளும் நடந்துச்சு. குடும்பத்துக்குள்ள பிரச்சினைகள் வர்றது சகஜம்தான். அது எல்லாத்துல இருந்தும் மீண்டு, பிக் பாஸ் 3 வீட்டுக்குள்ள அடியெடுத்து வைக்கப் போறாங்க வனிதா விஜயகுமார். வீட்டுக்குள்ள சரவெடி ஏதாவது இருக்கா, போன சீசன்ல வந்த போட்டியாளர்கள்ல யார மாதிரி வனிதா இருக்கப் போறாங்கன்றத வெயிட் பண்ணிப் பாப்போம்.

4. மீரா மித்துன்

பிக் பாஸ் வீட்டுக்குள் போகப் போற அடுத்த போட்டியாளர் மீரா மிதுன். '8 தோட்டாக்கள்'னு ஒரு படம் வந்துச்சே.. அந்தப் படத்தில் நடித்தவர் இந்த மீரா மிதுன். யாருன்னு யோசிக்கறீங்களா.. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துல கலையரசனோட மனைவியா நடிச்சுருப்பாங்க இல்லயா.. இப்ப ஞாபகம் வந்துருச்சா..? அவங்கதாங்க மீரா மிதுன்.
 

meera mithunநம்ம எத்திராஜ் காலேஜ் படிச்சவங்க மீரா மிதுன். 'Miss Queen of India' போட்டியில, தமிழ்நாட்டு சார்பா கலந்துகிட்டதும் இந்த மீரா மிதுன்தான். சில வருஷத்துக்கு முந்தி, விஜய் டிவில ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகிட்டு ரெண்டாவது இடத்தயும் புடிச்சாங்க மீரா மிதுன். சோ... பிக் பாஸ் வீட்டுக்குள்ள ஒரு ஹீரோ போறாரு, ஒரு ஹீரோயினும் போறாங்க...

5. மதுமிதா

மதுமிதான்னு சொன்னா கூட நிறைய பேருக்கு தெரியாது. ஆனா 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல தேனடை.. ஜாங்கிரின்னு சந்தானம் கூப்டுவாரே..  அவங்கதான் திஸ் மதுமிதா. முதல்ல லொள்ளு சபால நடிக்க ஆரம்பிச்சு.. அதுக்கப்பறம் சினிமாக்கு வந்தவங்க மதுமிதா. 

 

madhumithaநடிச்ச முதல் படமான 'ஓகே ஓகே' லயே செம ஹிட் ஆய்ட்டாங்க. அத தொடர்ந்து 'அட்டகத்தி', 'ராஜா ராணி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'ல அந்த ஸ்ஸ் ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் சீன், 'ஜில்லா', 'காக்கி சட்டை', 'காஞ்சனா 2', 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து'ன்னு ஏகப்பட்ட படங்கள் நடிச்சுட்டாங்க மதுமிதா. சினிமால பண்ணது ஃபுல்லா காமெடியான ரோல்தான். ஆனா பிக் பாஸ் வீட்டுக்குள்ளயும் காமெடியாவே இருப்பாங்களா.. இல்ல 'தூரத்துல பாத்தாதான்டா நான் காமெடி.. கிட்டத்துல பாத்தா டெரர் டா'ன்னு மல்லுக் கட்டுவாங்களான்னு தெரியல.


6. பவர்ஸ்டார் சீனிவாசன்

நம்ம லிஸ்ட்ல இருக்குற கடைசி போட்டியாளர்... இவர் பேர சொன்னாலே அதிரும். யெஸ்.. நம்ம பவர்ஸ்டார் சீனிவாசன்தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகப்போற அடுத்த போட்டியாளர். எங்கருந்து வந்தாருன்னே தெரியாம திடீர்னு ஃபேமஸாக ஆரம்பிச்சவரு நம்ம பவர் ஸ்டார். 'லத்திகா'னு ஒரு படத்த எடுத்து, அத தியேட்டர்ல 300 நாள் ஒட வச்சு, நான்தான் காசு கொடுத்து ஓட வச்சேன்னு பரிதாபமா சொன்ன மனுசன் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்துல நடிச்சு, ஆல் ஓவர் தமிழ்நாடு தெரிஞ்ச குழந்தை முகமானவர் பவர் ஸ்டார். அதுக்கப்பறமும் காமெடியா நிறைய படங்கள் ட்ரை பண்ணிப் பாத்தாரு பவர் ஸ்டார். பெருசா எதுவும் வொர்க்-அவுட் ஆகல. ஆனா 'கவன்' படத்துல ஒரே சீன்ல வந்தாலும் தியேட்டரே கை தட்டுற மாதிரியான ஒரு சீன்ல நடிச்சுட்டு போயிருப்பாரு பவர் ஸ்டார். 'நான் வெறும் சீனிவாசன் கிடையாது. டாக்டர் சீனிவாசன்'னு வேற சொல்லிட்டு இருந்தாரு. ஒரு செக் மோசடி வழக்குல சிக்கி ஜெயிலுக்கு வேற  போய்ட்டு வந்தாரு நம்ம பவர் ஸ்டாரு.

இப்பதான் அந்த கான்ட்ரவர்சி எல்லாம் முடிஞ்சுருக்கு. மறுபடியும் விட்ட எடத்துல இருந்து தொடங்கனும்.. அதே பாப்புலாரிட்டி வேணும்.. ஆனா ஜாலியான  வீட்ல இருந்தே செய்யனும்னு நினைச்சுருப்பாரு போல... கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையான்னு இந்த பிக் பாஸ் 3 வீடு கூப்ட உடனே என்ட்ரி கொடுக்குறாரு பவர் ஸ்டார் சீனிவாசன். இதுக்கு முன்னாடி உள்ள போன காமெடியன்ஸ்லாம் ஒன்னு எமோஷனலா அழுதுகிட்டோ. இல்ல கோபமா சண்டை போட்டுகிட்டோ தான் இருந்துருக்காங்க. பவர் ஸ்டார் என்ன பண்ணப் போறார்னு போகப் போக தெரிய ஆரம்பிச்சுரும்.

இது நமக்குக் கிடைத்த அதிகாரபூர்வமில்லாத, பாதி லிஸ்ட். முழுமையான தகவல், நாளை நமக்குக் கிடைத்துவிடும். அதில் மாற்றங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை நாளை பார்ப்போம்.  

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்