Advertisment

பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது

Bigg Boss celebrity Darshan arrested

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தாக்கியதாக உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன். முகப்பேர் கிழக்குப் பகுதியில் இவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே 'டீ பாய்' என்ற டீக்கடையில் டீ குடிக்க வந்த சிலர் தர்ஷன் வீட்டுக்கு முன்பு காரை பார்க் செய்துவிட்டு டீ குடிக்க சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது தர்ஷன் தரப்புக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் தர்ஷன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தாக்கப்பட்டவர் நீதிபதியின் மகன் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

தாக்குதலுக்குள்ளான மகேஸ்வரி மற்றும் நீதிபதியின் மகன் ஆதிசுடி உள்ளிட்ட இருவரும் ஜேஜே நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து தர்ஷனிடம் ஜெஜெ நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல் தர்ஷன் தரப்பில்தாங்கள் தாக்கவில்லை அவர்கள்தான் என் தம்பியை தாக்கினார்கள் என புகார் அளிக்கப்பட்டிருக்கிறதாகவும் கூறப்படுகிறது. ஆதிசுடி, மகேஸ்வரி ஆகிய இருவரும் அண்ணா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரித்துவந்தனர்.இந்நிலையில் மூன்று பிரிவுகளின் கீழ் தர்ஷனை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

arrest dharshan bigboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe