Skip to main content

பிக்பாஸ் நடிகைக்கு கொலை மிரட்டல் - சென்னை போலீசில் பரபரப்பு புகார்

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

 

நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர் நடிகை மீரா மிதுன். இவரது தாயாயர் சியாமளா சென்னை போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
 

அதில், எனது மகள் தமிழ்செல்வி என்ற மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் மாடலிங் தொழிலும் செய்கிறார். 2016ல் தென்னிந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


  meera mithun


 

இந்த நிலையில் சென்னையில் அழகிப்போட்டி நடத்த ஏற்பாடு செய்தார். அந்த போட்டியை நடத்த விடாமல் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பல்வேறு இடையூறுகளை செய்தார். கொலை மிரட்டல் கொடுக்கும் வகையிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றும் விதத்திலும் பல்வேறு அவதூறுகளை எனது மகளை பற்றி சமூக வலைதளங்களில் பரப்புகிறார். 
 

எனவே அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகள் பற்றி அவதூறு தகவல் வெளியிடாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 


 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

4 குழந்தைகளைக் கிணற்றில் வீசிய தாய்; அரங்கேறிய கொடூரம்!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Mother throws 4 children into a well in Madhya Pradesh

மத்தியப்பிரதேச மாநிலம் மாண்ட்சார் மாவட்டத்தில் உள்ள பிபல்கேடா கிராமத்தில் வசித்து வருபவர்கள் ரோட்டு சிங் - சுகுணா பாய் தம்பதியினர். இந்தத் தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரோட்டு சிங்கிற்கும் அவரது மனைவி சுகுணா பாய்க்கும் இடையே குடும்ப பிரச்சனைத் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது.  

ஒரு கட்டத்தில் இந்தத் தகராறு முற்ற, மனைவி சுகுணா பாய் கோபித்துக்கொண்டு தனது 4 குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகளுடன் சுகுணா பாய் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அருகே உள்ள கிணற்றில் தனது 4 குழந்தைகளையும் வீசிய சுகுணா பாய், அதே கிணற்றில் தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கவனித்த அப்பகுதியினர் உடனடியாக கிணற்றில் குதித்து சுகுணா பாயை காப்பாற்றினர். ஆனால் அவரது 4 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு 4 குழந்தைகளின் உடலை சடலமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

தாயுடன் திருமணத்தை மீறிய உறவு; தொழிலாளியை அடித்துக் கொன்ற மகன்!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
son who beat the worker who misbehaved with his mother

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாபுரம் வனப்பகுதியில் கடந்த மே மாதம் 26-ந் தேதி தலமலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அடர்ந்த வனப்பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து உடனடியாக தாளவாடி போலீசுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது. மனித எலும்பை கைப்பற்றிய போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது ? கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் தொட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் மாயமானதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் குமாருடையதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதைத் தொடர்ந்து குமாரை பற்றி தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் தொட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகமல்லு என்பவர் தலமலைக் கிராம நிர்வாக அலுவலரிடம் குமாரை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். பின்னர் அவரைத் தாளவாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நாகமல்லு போலீசாரிடம் குமாரைக் கொன்றது குறித்து பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். 

அதன் விவரம் வருமாறு:- நானும் என் அம்மா முத்துமணியும் தொட்டாபுரம் தோட்டத்தில் வசித்து வருகிறோம். என் தந்தை ராமசாமி டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார். எனது தம்பி கோவையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்துவருகிறார். என் அம்மாவுக்கும், குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதுபற்றி எனக்கு தெரிய வந்ததும் நான் குமாரை கூப்பிட்டு எச்சரித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து எனது தாயுடன் தொடர்பில் இருந்து வந்தார். 

இந்நிலையில் சம்பவத்தன்று நான் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வரும் போது குமாரும் எனது தாயும் தனிமையில் இருந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்தேன். குமாரைக் கயிற்றால் கட்டி வைத்து காலையில் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தேன். ஆனால் குமார் தொடர்ந்து என்னைத் தகாத வார்த்தையில் திட்டி கொண்டு இருந்தார். ஆத்திரத்தில் அருகில் இருந்த சுத்தியால் தலையில் அடித்தேன். இதில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையை மறைக்க எனது பெரியப்பா மகன் மாதேவனை துனைக்கு அழைத்து குமார் உடலை மறைக்க திட்டம் தீட்டினோம். இதற்கு என் தாயும் உடந்தையாக இருந்தார். வனப்பகுதியில் உடலை வீசி விட்டால் வனவிலங்குகள் தின்று விடும் என நினைத்து உடலை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று வீசிவிட்டு வந்து விட்டோம். 

யாரும் எங்களை கண்டு பிடிக்க வில்லை என நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் கடந்த ஜீன் 26 ஆம் தேதி வனத்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது எலும்புகளை பார்த்து போலீசாரிடம் தெரிவித்து விசாரணை மேற்கொண்டனர். எப்படியும் போலீசாரிடம் மாட்டி விடுவோம் என நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து தாளவாடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து நாகக்மல்லு, மாதேவன், முத்துமணி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாகமல்லு , மாதேவன் ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், முத்துமணி கோவையில் உள்ள பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.