Advertisment

பிக் பாஸ்-3ன் அதிரடி மாற்றங்கள்! எதிர்பாராத விலகலும் சர்ச்சையும்! 

உலகளவில் புகழ் பெற்ற பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ, இந்தியாவில் இந்தியை தொடர்ந்து எண்டாமேல் நிறுவனம் கடந்த 2017 ல் தமிழிலும் 2018 ல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அறிமுகம் செய்தது . பிக் பாஸ் முதல் சீசனை போல கடந்த பிக் பாஸ் சீசன் இரண்டில் எதிர்பார்த்த அளவு மக்களிடம் ஆதரவு கிடைக்க வில்லை. அதற்கு காரணம், சீசன் ஒன்றில் இருந்ததை போல பெரிய அளவு சுவாரசியம் எதுவுமில்லை. இதனால் சீசன் ஒன் மற்றும் சீசன் இரண்டுக்கு ஸ்பான்சர் செய்த வீவோ மொபைல்ஸ் சீசன் மூன்றுக்கு ஸ்பான்சர் செய்ய போவதில்லை என்று நம் நக்கீரனிலே செய்தியில் கூறியிருந்தோம்.

Advertisment

k

அதைப்போல விவோ மொபைல்ஸ் விலகிகொண்டது. இந்தநிலையில் ஒரு வழியாக நாடாளுமன்றம் தேர்தல் முடிந்து கமல் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஏற்பாடு செய்யப்படுவிட்டது. சீசன் டூ போல இல்லாமல் சுவாரசியம் அதிகரிக்க செட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதே போல கடந்த முறையை விட செட் மிகபெரிய பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

b

கடந்த முறை ஐஸ்வரியா தத்தா, புகைபிடிக்கும் அறையில் புலம்பியது மற்றும் அதில் சில தவறுகளும் நடந்ததாக வெளியான தகவல் சர்ச்சையை கிளப்பியது. அதை தவிர்க்கும் விதமாக இந்தமுறை புகைபிடிக்கும் அறையின் வடிவம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அறிமுகம் செய்யப்பட்ட சிறை போன்ற அறையில் கழிவறையில்லாத காரணத்தால் சில பிரச்சனை எழுந்தது. இந்த முறை சிறையில் கழிவறை அமைத்துள்ளனர். அதே போல தண்ணீர் பிரச்சனை, இயற்கையை பாதுகாப்பது போல அக்கறையுள்ள விதமாகவும் சில செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கமிருக்க பிக் பாஸ் சீசன் டூ’வில் நண்பர்கள் ஆன மும்தாஜ், ஜனனிஐயர், ரம்யா என்.எஸ்.கே, மமதி மற்றும் சாரிக் அனைவரும் ஒன்று கூடி ஒரு தனியார் ரெசார்ட்டில் கேக் வெட்டி பிக் பாஸ் சீசன் டூ முடிந்து ஓர் ஆண்டு ஆனதை நினைவூட்டி கொண்டாடினர். இதில் இன்னொரு பிரிவாக யாசிகாஆனந்தும், ஜனனிஐயர் ஆகியோர் நட்சத்திர ஓட்டலில் இருவரும் கேக் வெட்டி, பெல்லி நடனமாடி கவர்ச்சியாக கொண்டாடினர்.

இந்த முறை போட்டியாளர்கள் யார் யார் என்பது பார்வையாளர்களின் தேடலாக உள்ளது. அதில் சிலர் நகைச்சுவை நடிகையான ஜாங்கிரி மதுமிதா ( ஓகே.ஓ.கே படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வருபவர் ),கர்னாடக இசை பாடகர் மோகன் வைத்யா, ஆல்யாமானசா, கஸ்தூரி, ராதாரவி, பிரேம்ஜி, பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீரெட்டி, ஸ்ரீமன், சாந்தினி, விசித்திரா, வி.ஜே.ரம்யா, பூனம்கபூர், ரமேஷ்திலக், சரண்சக்தி,கிருஷ், வனிதா ஆகியோர் லிஸ்டில் வருகின்றனர்.

நிகழ்ச்சி துவங்கும்முன் சர்ச்சையுடன் பிரச்சனையும் துவங்கிவிட்டது. " ஆமாம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சுதன் என்பவர் பிக் பாஸ் சீசன் த்ரீ நிகழ்ச்சிக்கு தடை கோரி மனு செய்துள்ளார். அதில், இந்த நிகழ்ச்சியை குடும்பத்துடன் பார்க்கிறார்கள். அதில் பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஆபாசமாகவும், கவர்ச்சி உடை அணிவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதற்கு முன் இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசன் தணிக்கை செய்தபின் ஒளிபரப்ப வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

Biggboss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe