Advertisment
நடிகை சனம் ஷெட்டி, சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், காதலித்து ஏமாற்றியதாகவும், திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்ய மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நடிகர் தர்ஷன் மீது ஆபாசமாகத் திட்டுதல், மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.