பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று ஒளிபரப்பானது. இந்த நிகழ்வில் பிக்பாஸ் இல்லத்தின் உள்ளே 105 நாட்களாக வெற்றிகரமாக இருந்த சாண்டி மற்றும் முகேன்ஆகிய இருவரில் யாருக்கு வெற்றிஎன்பதை அறிவிக்கும் கட்டம் வந்தது. நாம்முன்பே கூறியது போல பிக் பாஸ் 3 வெற்றியாளர் பட்டத்தை முகேன் பெற்றார். இருந்தாலும் இறுதிவரை சிறந்த ஒரு போட்டியாளராக தொடர்ந்த சாண்டிக்கும் நினைவு பரிசு பதக்கம் வழங்கப்பட்டது.

Advertisment

BIGBOSS 3 TITTLE WINNER MUKEN

இந்த நிகழ்விற்கு முன்னதாக ஒவ்வொருவரிடமும் யார் வெற்றி பெற்றால்நன்றாக இருக்கும் என்றகேள்வி கேட்கப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களின் பெயர்களை கூறினர். கவின் தனது விருப்பமாக கூறும்போது நான்கு பேரில் யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சிதான். இருந்தாலும் லாஸ்லியா வெற்றி பெற்றால் இன்னும் பெருமை அடைவேன் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் லாஸ்லியா மீதான கவினின் கூடுதல் அன்புவெளிப்பட்டது.அதேநேரம் சாண்டி வீட்டினுள்ளே இருந்த இருந்தபொழுது கவினும் சாண்டியும் தாங்கள் முன்பே சில திட்டங்களை செய்து வைத்திருப்பதாகவும், அந்த புரிதலின் படி தான் கேமை விளையாடி வருவதாகவும் அவ்வப்போது கூறி வந்துள்ளனர்.

Advertisment

BIGBOSS 3 TITTLE WINNER MUKEN

அதுமட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் பிக்பாஸ் போட்டிக்கு முன்பே நெருங்கிய நண்பர்கள் என்றும், பல வருடங்களாக ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்றும் கூறிவந்தனர். இந்நிலையில் கவின் தனது விருப்பமாக லாஸ்லியாவை தெரிவித்தார். சாண்டி நிறைவு நாளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசு பதக்கத்தைகவினை மேடைக்கு அழைத்து அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் தான் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றதற்கும்,வெற்றிகரமாக கடந்து வந்ததற்கும் கவினுக்குபங்கும் உண்டு என்று கூறினார்.

இந்த வகையில் சாண்டியின் பெயரை கவின் கூற மறந்தாலும், கவினை மேடைக்கு அழைத்து பரிசை அணிவித்து பெருமைப்படுத்தினார் சண்டி.

Advertisment