/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_200.jpg)
தமிழ்நாட்டில் அதிக சுவையுள்ள பலாப்பழங்கள் கிடைக்கும் பகுதிகளில் புதுக்கோட்டை மாவட்டமும் ஒன்று. புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம், வடகாடு, மாங்காடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், செரியலூர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு உள்பட சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உற்பத்தியாகும் பலாப் பழங்களுக்கு தனி சுவையுண்டு. சென்னை, கோவை, மதுரை மட்டுமின்றி மும்பை, பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும் இந்தப் பலாபழங்களை கேட்டு வாங்கிச் செல்கின்றனர். எட்டுக்குடி முருகன் கோயில் திருவிழாவில் இப்பகுதி பலாவுக்கே தனி மவுசு இருக்கிறது.
கடந்த 3 மாதங்களில் சுமார் 5000 டன் வரை பலாப்பழங்கள் உற்பத்தியாகி விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கடும் வெயிலுக்கு மத்தியில் சில நாட்கள் பெய்த மழையால் பலாப்பழங்கள் அறுவடை அதிகமானதால் விற்பனை விலை அடியோடு குறைந்தது. தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது. சின்ன சின்ன பழங்களே விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு நாளைக்கு சுமார் 100 டன் வரை விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது சுமார் 3 டன் அளவிற்கு மட்டுமே பலாப்பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_119.jpg)
இந்த நேரத்தில் தான் கீரமங்கலத்தில் உள்ள காய்கனி கமிசன் கடைக்கு சுமார் 50 கிலோ எடையுள்ள ஒரு பலாப்பழம் விற்பனைக்கு வந்தது. சீசன் முடியும் நேரத்தில் இவ்வளவு பெரிய பலாப்பழமா? என்று பொதுமக்கள் ஆச்சர்யமாக பார்த்துச் சென்றனர். சிலர் தூக்கிப் பார்த்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)