தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி,சேரன்,கவின் மற்றும் தர்ஷன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் அவருக்கு அடுத்து சாண்டி ஆகிய இருவரும் இறுதி சுற்றில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். தர்ஷன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது பெரும் அதிருப்தியை பிக் பாஸ் மீது ஏற்பட்டது.

Advertisment

sanam shetty

Advertisment

இந்த நிலையில் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க் பற்றி சில நாட்களுக்கு முன்பு தர்ஷனின் காதலி கூறியிருந்தார். அதில் சில டாஸ்க்கால் போட்டியளர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் டியூமர் பற்றி சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ஆனால் தற்போது சர்ஜரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனவே உங்களது உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்.எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவு செய்துள்ளார்.