Advertisment

பிக் பாஸ்ஸில் ஏற்பட்ட சர்ச்சை...தவறான முடிவு...லாஸ்லியாவிற்காக தர்ஷன் வெளியேற்றம்? அதிர்ச்சி ரிப்போர்ட்!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கி இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி,சேரன்,கவின் மற்றும் தர்ஷன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் அவருக்கு அடுத்து சாண்டி ஆகிய இருவரும் இறுதி சுற்றில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். கடந்த வாரம் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது அனைத்து பிக் பாஸ் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

big boss

big boss

ஏனென்றால் வாக்குகளில் குறைவாக இருந்த ஷெரின் அல்லது லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தர்ஷன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் ஆரம்ப காலத்தில் லாஸ்லியாவின் செயல்பாடுகள் முதல் சீசனில் இருந்த ஓவியாவைப் போல் இருந்தாலும், பின்பு கவின் மீது காதல் மட்டுமே செய்து, பிக் பாஸ் போட்டியில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்தார். ஆரம்பித்தில் இருந்தே போட்டியில் அதிக கவனம் செலுத்தியவர் தர்ஷன். அப்படி இருந்தும் தர்ஷன் எப்படி வெளியேறினார் என்ற கேள்விக்கு கமலிடம் இருந்து கூட சரியான பதில் கிடைக்கவில்லை என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் லாஸ்லியாவையும், ஷெரினையும் காப்பாற்றுவதற்காக தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று பிக் பாஸ் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Advertisment
kamalhaasan losliya tharshan sanam shetty big boss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe