Advertisment

"கவினின் செயல் மனிதத்தன்மை இல்லாத ஒரு செயல்" பிக் பாஸ் சாக்ஷி வெளியிட்ட அதிரடியான வீடியோ!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி மற்றும் மதுமிதா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையே பிக் பாஸ் சில டாஸ்குகளை கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த டாஸ்க் ஒன்றில் ஒவ்வொரு போட்டியாளரும் தான் ஏன் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர் என்பதை மற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

Advertisment

big boss

அதே போல் மற்ற போட்டியாளர்கள் கேள்வி எழுப்பலாம் என்று அந்த டாஸ்க்கின் விதிமுறையாக பிக்பாஸ் கூறியிருந்தார். அப்போது வனிதா தனது சக போட்டியாளரான கவினிடம் சாக்‌ஷி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கவின், சாக்‌ஷி தன்னை வைத்து கேம் விளையாடியதாகவும், அதைப் புரிந்துகொண்டதால் எனது மனதில் மாற்றம் ஏற்பட்டதாக கூறினார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்த நடிகை சாக்‌ஷி அகர்வால் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கவினிடம் நான் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். முதலில் யார் புரபோஸ் செய்தது என்று எனக்குத் தெரிய வேண்டும். நான் கவினிடம் புரபோஸ் செய்தேனா அல்லது அவர் என்னிடம் காதலை சொன்னாரா என்பது பார்வையாளர்களுக்கு முழுவதுமாக தெரியுமா? என்று தெரியவில்லை. இரண்டாவதாக பாத்ரூமில் என்கிட்ட கவின் ரொம்ப கத்தி பேசினார்.

Advertisment

அதாவது என்னை சாவடிச்சுடுவேன் என்று பேசினார். என்கிட்ட பேசுன மாதிரி வனிதா கிட பேச முடியுமா ? இல்ல மதுமிதா கிட்ட பேச முடியுமா? இல்ல வேறு யாருகிட்டயும் கவினால் இப்படி பேச முடியுமா? அந்த அளவுக்கு என்னிடம் அவர் உரிமை எடுக்கக் காரணம் என்ன? பின்பு, கல்யாண விஷயத்தை பற்றி பேசும் போது நீ எனக்கு பொருத்தமாக இருப்ப என்று கவின் தான் என்னிடம் கூறினார். அதே போல் ஷெரினிடம் அவர் பேசும்போது கூட மச்சான் இனிமேல் சாக்‌ஷி என்னுடைய வீட்டில் தான் இருப்பார். நீ சாக்‌ஷியைப் பார்க்க வேண்டும் என்றால் எங்கள் வீட்டுக்கு தான் வர வேண்டும் என்று கூறி திருமணம் வரைக்கும் எடுத்துச் சென்றது கவின் தான். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட நினைக்காம என் மேல குற்றம் சொல்கிறார். கவின் இப்படி பேசியதை கடுமையாக விமர்சித்துள்ளார் சாக்ஷி. கவின் உன்னால் எப்படி சட்டை மாற்றுவது போல் பெண்களை மாற்றிக் கொள்ள முடிகிறது. பெண்களான எங்களால் அப்படி ஒருபோதும் மாற்ற முடியாது. உன்னுடைய செயல் மனிதத்தன்மை இல்லாத ஒரு செயல்" என்று கூறியுள்ளார். பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளிவந்த சாக்ஷி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

actor bigboss contest kamalhaasan kavin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe