Advertisment

இன்று மாலை முதல் மீண்டும் பிக்பாஸ் சீசன் 4! (படங்கள்)

Advertisment

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். ஹிந்தியில் 14 சீஸன் வரை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

தமிழில் அக்டோபர் 4- ஆம் தேதி முதல் (இன்று)மாலை 06.00 மணிக்கு பிக்பாஸின் நான்காவது சீஸன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. முன்னதாக மூன்று சீஸன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன்தான் இந்த சீஸனையும் தொகுத்து வழங்குகிறார்.

தினசரி, பிக்பாஸ் தமிழில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்று பல தகவல்கள்பரவி வருகின்றநிலையில்இன்று மாலை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அந்த பதினான்கு பேர் யார் என்பது தெரிந்துவிடும்.இதனிடையே பிக்பாஸ் சீசன் 4- யை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

big boss kamalhasan
இதையும் படியுங்கள்
Subscribe