Skip to main content

இன்று மாலை முதல் மீண்டும் பிக்பாஸ் சீசன் 4! (படங்கள்)

Published on 04/10/2020 | Edited on 04/10/2020

 

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். ஹிந்தியில் 14 சீஸன் வரை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

தமிழில் அக்டோபர் 4- ஆம் தேதி முதல் (இன்று)மாலை 06.00 மணிக்கு பிக்பாஸின் நான்காவது சீஸன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. முன்னதாக மூன்று சீஸன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன்தான் இந்த சீஸனையும் தொகுத்து வழங்குகிறார்.

தினசரி, பிக்பாஸ் தமிழில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்று பல தகவல்கள் பரவி வருகின்ற நிலையில் இன்று மாலை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அந்த பதினான்கு பேர் யார் என்பது தெரிந்துவிடும். இதனிடையே பிக்பாஸ் சீசன் 4- யை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

“விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதலில் அழைத்தது நான்தான்” - கமல்ஹாசன்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Kamal Haasan says I have already spoken to Vijay who has entered politics

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு இன்றைய நாளோடு 7ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க சென்னையில் இன்று (21-02-24) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை சென்னை அலுவலகத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஏற்றினார். 

அதன்பின், கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தியாவிலேயே 40 சதவீதம் பேர் ஓட்டு போடாமல் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் ஓட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும். என்னை எல்லோரும் முழு நேர அரசியல்வாதியா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால், ஓட்டு போடாமல் இருப்பவர்கள் முழு நேர குடிமகனாக கூட இருக்கவில்லை. எனவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும். முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை. என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன். என்னுடைய அரசியல் பயணம் என்பது ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டுக்கொண்டே இருப்பேன். அரசியலை விட்டு என்னைப் போக வைக்க முடியாது. 

நாட்டு மக்களிடம் குடியுரிமை ஆட்டம் கண்டுள்ளது. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது ஒன்றிய அரசு. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக வேளாண் பட்ஜெட்டின் விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10% கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளார்கள். மாநிலங்களுக்கு சரியான வரிப்பகிர்வு அவசியம்” என்று பேசினார்

அதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கூட்டணி குறித்து நான் மட்டும் தனியாக சொல்ல முடியாது. மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தான் கூற முடியும். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கட்சி அரசியலை தாண்டி நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்யுடன் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய முதல் வரவேற்பு குரல் என்னுடைய குரல் தான்” என்று கூறினார்.