தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து சீக்ரெட் ரூமில் வைத்து இருந்தனர்.

Advertisment

big boss

பின்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அதனையடுத்து போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக அழைத்து வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் கவிஞர் சினேகன் போட்டியாளர்கள் குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் "லாஸ்லியாவிற்கு ஜூலி எவ்ளோவோ மேல்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சரவணனுக்கு சமீபத்தில் தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு புதிய பொறுப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதாவது, தமிழக அரசு குறைந்த செலவில் வெளியிடப்படும் தரமான திரைப்படங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வழங்க திட்டமிட்டுள்ளது. எனவே 2015-2017 வரை வெளியான சிறந்த படங்களை தேர்வு செய்ய திரைப்பட மானியக்குழு என்ற குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நடிகர் சரவணன் மற்றும் சிங்கமுத்து ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் உள்ளார்.