ADVERTISEMENT

"நானும், முகேனும் ஒன்னா இருக்க வீடியோவை வைரல் பண்ணுங்க"... மீரா மிதுனின் சர்ச்சை ஆடியோ!

01:17 PM Oct 01, 2019 | Anonymous (not verified)

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி, சேரன், கவின் மற்றும் தர்ஷன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் அவருக்கு அடுத்து சாண்டி ஆகிய இருவரும் இறுதி சுற்றில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். தர்ஷன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது பெரும் அதிருப்தியை பிக் பாஸ் மீது ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீரா மிதுன் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதோடு சாண்டிக்கும், முகேனுக்கும் புது டிரஸ் வாங்கி கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். இந்த சீசனில் அதிக சர்ச்சைக்கு ஆளானவர் நடிகை மீரா மிதுன். இதனையடுத்து தற்போது மீரா மிதுன் பேசும் ஆடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த ஆடியோவில் மீரா மிதுன் ஒருவரிடம் பேசும் போது, நானும் முகேனும் நெருக்கமாக இருக்க சீன எடுத்து வீடியோ ரெடி பண்ணி வைரலாக்குங்க என பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT