Advertisment

பிக் பாஸ் லாஸ்லியாவிடம் சேரன் பற்றி கேட்கப்பட்ட கேள்வி... லாஸ்லியா கூறிய பதிலால் அதிருப்தி!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது சீசனில் முகேன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர்கள் கவின், லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா கலந்து கொண்ட போது அவர்களுக்கு கவின், லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது. பின்பு லாஸ்லியா,கவின் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்கள் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் கவினுக்கும், பெண்கள் பிரிவில் லாஸ்லியாவிற்கும் விருது வழங்கியுள்ளனர்.

Advertisment

lossliya

அப்போது அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், பிக் பாஸ் லாஸ்லியாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்களும், இயக்குனர் சேரனும் தந்தை, மகள் போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தீர்கள். அதனால் உங்களிடம் அந்த கேள்வியை கேட்கிறேன் என்று இயக்குனர் சேரன் அவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா என்று கேட்டார். அதற்கு லாஸ்லியா எனக்கு சேரன் சாரோட பிறந்த நாள் எப்போது என்று தெரியாது என்று கூறினார். இது நிகழ்ச்சி பார்த்த அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் சேரன் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி அவர் வீட்டிற்கே சென்று நடிகை சாக்ஷி வாழ்த்தினார். ஆனால் மகள் போல் இருந்த லாஸ்லியாவிற்கு சேரன் பிறந்த தேதி கூட தெரியவில்லையே என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

big boss Award cheran director lossliya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe