தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது சீசனில் முகேன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு ஒரு செய்தி சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

big boss losliya

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து கொண்ட போது அவருக்கு லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது. பின்பு லாஸ்லியா,கவின் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று அவருக்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இந்த விருதிற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முதலில் நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி. நீங்கள் என் மீது கொண்ட அன்பு காரணமாகவே இந்த விருது கிடைத்துள்ளது. மீண்டும் உங்களுக்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார்.