தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இரண்டு சீசன்களைப் போல் மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மூன்றாவது சீசனில் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான நபர்களில் நடிகர் கவினும் இடம் பெற்றிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் கவின் நடித்து வருவதாக கூறுகின்றனர். இந்த நிலையில் கவினை பற்றி ஒரு சில அப்டேட் வந்துள்ளதால் அவரின் பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதாவது,

Advertisment

actor

நடிகை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன், சிவகார்த்திகேயனுடன் கவின் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. அதோடு அந்த படத்தில் கவினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கவின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். விஜய் டிவி சீரியலில் நடிகராக அறிமுகமான கவின் நட்புன்னா என்னானு தெரியுமா படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இதோடு மேலும் ஒரு சில தகவலும் கவினைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர். அதில், சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ஒரு படத்திலும் கவின் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.