திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் (அக்டோபர் 29) மீட்கப்பட்டான். சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

kavin

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு சார்பில் 10 இலட்சமும், அதிமுக சார்பில் 10 இலட்சமும் வழங்கினார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி சார்பில் 10 இலட்சம் வாங்கினார், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, 1 இலட்சம் வழங்கினார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3இல் 16 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த கவின் சுஜித்தின் மரணம் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், wearesorrysujith, நியாயமே இல்லாத மரணம் என்று பதிவிட்டுள்ளார்.