Advertisment

தனக்கு பிடித்த பெண்ணுக்காக பிக் பாஸ் கவின் கூறிய கவிதை... கவினை பாராட்டிய பிரபலங்கள்!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது சீசனில் முகேன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர்கள் கவின், லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா கலந்து கொண்ட போது அவர்களுக்கு கவின், லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது. பின்பு லாஸ்லியா,கவின் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டு வந்தது.

Advertisment

kavin

Advertisment

தற்போது தனியார் தொலைக்காட்சியில், கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்கள் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியது. இதில் ஆண்கள் பிரிவில் கவினுக்கும், பெண்கள் பிரிவில் லாஸ்லியாவிற்கும் விருது வழங்கியுள்ளனர். இந்த விருதுக்கு கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து இருந்தார். அதில், பள்ளியில் படிக்கும் போது கூட வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் தான் வாங்கியுள்ளேன். நீங்கள் எனக்கு தங்கப்பதக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா கவினிடம், நீங்கள் நன்றாக கவிதை எழுதுவீர்களே உங்கள் வாழ்க்கையில் முக்கியமான பெண் ஒருவருக்கு, அதாவது உங்களது தாயாருக்காக ஒரு கவிதை சொல்லுங்கள். நீங்கள் வேற யாரையும் நினைக்க வேண்டாம்.” என்று கேட்டுள்ளார் . அப்போது அதற்கு கவின் ” அம்மா என்ற சொல்லே ஒரு கவிதை தானே என்று கூறினார். இதற்கு அரங்கத்தில் இருந்த அனைவரும் ஆரவாரமாக கை தட்டி பாராட்டினர்.

Award behindwoods bigboss kavin tv show
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe