Skip to main content

தனக்கு பிடித்த பெண்ணுக்காக பிக் பாஸ் கவின் கூறிய கவிதை... கவினை பாராட்டிய பிரபலங்கள்!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது சீசனில் முகேன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர்கள் கவின், லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா கலந்து கொண்ட போது அவர்களுக்கு கவின், லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது. பின்பு லாஸ்லியா,கவின் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. 
 

kavin

 


தற்போது தனியார் தொலைக்காட்சியில், கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்கள்  என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியது. இதில் ஆண்கள் பிரிவில் கவினுக்கும், பெண்கள் பிரிவில் லாஸ்லியாவிற்கும் விருது வழங்கியுள்ளனர். இந்த விருதுக்கு கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து இருந்தார். அதில், பள்ளியில் படிக்கும் போது கூட வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் தான் வாங்கியுள்ளேன். நீங்கள் எனக்கு தங்கப்பதக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா கவினிடம், நீங்கள் நன்றாக கவிதை எழுதுவீர்களே உங்கள் வாழ்க்கையில் முக்கியமான பெண் ஒருவருக்கு, அதாவது உங்களது தாயாருக்காக ஒரு கவிதை சொல்லுங்கள். நீங்கள் வேற யாரையும் நினைக்க வேண்டாம்.” என்று கேட்டுள்ளார் . அப்போது அதற்கு கவின் ” அம்மா என்ற சொல்லே ஒரு கவிதை தானே என்று கூறினார். இதற்கு அரங்கத்தில் இருந்த அனைவரும் ஆரவாரமாக கை தட்டி பாராட்டினர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Applications are welcome for Computer Tamil Award

 

2023 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் மற்றும் செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் கடந்த 2020, 2021, மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்திலோ, http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

இதுதவிர, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 31.12.2023 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இணையதளத்திலேயே போதுமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

 

கூடுதல் விவரங்களுக்கு 044 28190412, 044 28190413 என்ற தொலைப்பேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (31.12.2023) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Applications are invited for the Fort Amir Religious Harmony Medal

 

மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோட்டை அமீரின் பெயரால் ‘கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்’ ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

 

மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். இப்பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. வரும் குடியரசு தின (26.01.2024) விழாவின்போது வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவரைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள்  மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ, அரசு செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு டிசம்பர் 15 ஆம் தேதிக்கு (15.12.2023) முன்பாக அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு  முதலமைச்சரால் குடியரசு தினத்தன்று (26.01.2024) பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவார் என அரசு பொதுத் துறை செயலாளர் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்