தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற்றார். அதோடு டைட்டில் வின்னர் பெற்ற முகேனுக்கு 50 இலட்சம் பரிசும் கிடைத்தது. ஆனால் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் அவர் 5 லட்சம் ருபாய் பெற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். கவின் குடும்பத்தாருக்கு சில பிரச்சனைகள் இருந்து அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின் தன் அம்மா மற்றும் பாட்டி இருவரையும் சிறையிருந்து மீட்டு வந்த புகைப்படத்தை வெளியிட்டார்.

Advertisment

kavin

Advertisment

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கவின் தனது குடும்ப பிரச்சனையில் கவனம் செலுத்தி அந்த பிரச்சனையை மீட்டதற்கு கவின் நண்பர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதே வேளையில் பிக்பாஸ் வீட்டில் நடந்து முடிந்த நிகழ்வுகள் கவனின் முகம் வாடியும், உடல் தோற்றம் மெலிந்தும் காணப்பட்டார். இந்நிலையில், கவினின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னணு தெரியுமா பட இயக்குனர் சிவா அரவிந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உனக்கும் எல்லா நல்லதும் நடக்கும், நாம் மகிழ்ச்சியானதை மட்டும் பேசுவோம், கவலை படாமல், சந்தோசமாக இரு, கவலைகளை மறைக்கவும், சிரிப்பு தான் சிறந்த வழி என அந்த பதிவில் கூறியுள்ளார்.