தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது சீசனில் முகேன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர்கள் கவின், லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா கலந்து கொண்ட போது அவர்களுக்கு கவின், லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது. பின்பு லாஸ்லியா,கவின் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டு வந்தது.

Advertisment

big boss

இந்த நிலையில், தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்கள் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் கவினுக்கும், பெண்கள் பிரிவில் லாஸ்லியாவிற்கும் விருது வழங்கியுள்ளனர். இந்த விருதுக்கு கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், பள்ளியில் படிக்கும் போது கூட வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் தான் வாங்கியுள்ளேன். நீங்கள் எனக்கு தங்கப்பதக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ட்விட்டர் பக்கத்தில் பலரும் கவினுக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.

Advertisment

CAB