பிக் பாஸ் மூலம் பிரபலமான கவினுக்கு இப்படி ஒரு ரசிகரா? என்ன செய்தார் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிக் பாஸ் சீசன் 3யில் டைட்டில் வின்னராக முகேன் வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் 5 லட்சம் கொடுத்து இதை யாரவது ஒருவர் பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறலாம் என கூறிய போது, என்னை இந்த வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை, எனவே நான் வெளியேறுகிறேன் என கூறிவிட்டு கவின் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்படத்தக்கது.

big boss

பிக் பாஸ் வீட்டில் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பிக் பாஸ் கவினுக்கு கிடைத்தது. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு இனி வேலையில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக கவின் தெரிவித்திருந்தார். அதனால் அவர் விரைவில் படத்தில் ஹீரோவாக நடிக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கவினின் தீவிர ரசிகர் ஒருவர் கவினின் முகத்தை கையில் பச்சை குத்தியுள்ளார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

actor big boss fans kavin viral video
இதையும் படியுங்கள்
Subscribe