வனிதா மகளின் செயலால் அதிர்ச்சியான பிக் பாஸ் போட்டியாளர்கள்!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து சீக்ரெட் ரூமில் வைத்து இருந்தனர். பின்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

big boss

அதனையடுத்து போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக அழைத்து வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை வனிதாவின் இரண்டு பெண் குழந்தைகளும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போது “வாயாடி பெத்த புள்ள..” பாடலோடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். வனிதாவின் மகள்கள் வீட்டிற்குள் வந்ததும் போட்டியாளர்களிடம் விளையாடி மகிழ்ந்தனர். அப்போது சாண்டி, மூகின் ஆகியோருடனும் பங்கேற்று விளையாடினர். அப்போது வனிதாவின் இளைய மகள் தன் அக்காவின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார். இதை பார்த்துக்கொண்டிருந்த சக பிக் பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி ஆகிவிட்டனர்.

bigboss Kamalhasaan tv show vanitha vijayakumar
இதையும் படியுங்கள்
Subscribe