Skip to main content

பிக் பாஸ் லாஸ்லியாவிற்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 80 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் வெளியே வந்தவுடன் அவர்களுக்கு பட வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள் மற்றும் தொலைக்காட்சியில் இருக்கும் கேம் ஷோவிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். 
 

losliya



இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான சரவணன் வெளியே வந்தவுடன் அவருக்கு 2015-2017 வரை வெளியான சிறந்த படங்களை தேர்வு செய்ய திரைப்பட மானியக் குழுவில் நடிகர் சரவணன் இடம் பெற்றார். இதனையடுத்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் லாஸ்லியாவிற்கு சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி மற்றும் சரவணன் மீனாட்சி இந்த இரண்டு சீரியலில் எதாவது ஒன்றின் இரண்டாம் பாகத்தில் லாஸ்லிய நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திரைத்துறையில் லாஸ்லியாவிற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

காதலியுடன் கை கோர்க்கும் கவின்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

kavin marriage update

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின் கடைசியாக 'டாடா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பலரது பாராட்டையும் பெற்றது. இதையடுத்து நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கவினுக்கு ஜோடியாக அயோத்தி படம் மூலம் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் கவினுக்கு திருமணம் நடக்கவுள்ளது. வருகிற 20 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை கரம் பிடிக்கவுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.