Advertisment

பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியதால் அடித்த ஜாக்பாட்! செம்ம ப்ளான்! 

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 95 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி,சேரன் மற்றும் கவின் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.தற்போது பிக் பாஸ் வீட்டில் 5 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இந்த வாரம் முகேனை தவிர மற்ற ஐந்து போட்டியாளர்களும் இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

big boss

பிக் பாஸ் போட்டியாளர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறார். அதில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் 5 லட்சம் கொடுத்து இதை யாரவது ஒருவர் பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறலாம் என கூற, என்னை இந்த வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை, எனவே நான் வெளியேறுகிறேன் என கூறிவிட்டு கவின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது பற்றி பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த நிலையில் கவினுக்கு ஒரு நாளைக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்க 30 ஆயிரம் சம்பளம் பேசியதாக சொல்லப்படுகிறது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த 95 நாட்கள் இருந்துள்ளார். இதனால் அவர் 28,50000 ரூபாயை சம்பளமாக பெற வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். ஒருவேளை மீதமுள்ள இந்த 5 நாட்கள் இருந்திருந்தால் அவருக்கு 1,50,000 ரூபாய் மட்டுமே கிடைத்திருக்கும். தற்போது அவர் 5 இலட்சத்தை பெற்றுள்ளதால் கூடுதலாக 3,50,000ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருந்துள்ளது. அதன் காரணமாகவே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்று கூறிவருகின்றனர்.

Advertisment
jackpot New plan kamalhaasan kavin Biggboss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe