Advertisment

பிக் பாஸ் வனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்... மீண்டும் களத்தில் இறங்கிய வனிதா... என்ன ஒரு ஒற்றுமை!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். கடந்த இரண்டு சீசன்கள் போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிக் பாஸ் மூன்றாவது சீசனில் முகேன் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகளும், மக்கள் மத்தியில் எளிதாக பிரபலமாகவும் ஆகிவிட முடியும். இந்த நிகழ்ச்சியை சுவரியாசமாக கொண்டு சென்றதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர் நடிகை வனிதா. நடிகை வனிதா பிரபல சினிமா நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார்.

Advertisment

vanitha

நடிகை வனிதா தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். நடிகர் விஜய், ராஜ்கிரண் மற்றும் சில நடிகர்களுடன் நடித்தவர். அதோடு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்னை காரணமாக சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தார். தற்போது சந்திரலேகா என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் களமிறங்கியுள்ளார். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் சினிமாவில் அறிமுகமாகும் போது சந்திரலேகா படம் மூலம் வந்தார். சின்னத்திரையிலும் சந்திரலேகா என்ற தொடரின் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த தொடரை ஆனந்தபாபு இயக்குகிறார். சமீபத்தில் வனிதா வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

tv show Actress vanitha vijayakumar big boss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe